தமிழ்நாடு
"என்னை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்" - நிர்மலா தேவி பேசியதாக வெளியான ஆடியோ
"என்னை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்" - நிர்மலா தேவி பேசியதாக வெளியான ஆடியோ
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீனில் உள்ள நிர்மலா தேவி, தன்னை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லும்படி தனது வழக்கறிஞரிடம் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
ஜாமினில் வெளியே வந்த நிர்மலா தேவி அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தர்ஹாவில் தலைமுடியை விரித்துக் கொண்டு மனநிலை சரியில்லாதவர் போல நடந்துகொண்டார். அவரை பெண் காவலர்கள் காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்று வீட்டில் விட்டனர்.
இந்நிலையில் தனது வழக்கறிஞரிடம் போனில் நிர்மலா தேவி பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், கடந்த சில நாட்களாக என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று தெரியவில்லை எனவும், மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும் என்றும் பேசியதாக ஆடியோ வெளியாகி உள்ளது.