பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்தில் பிடிஆர் என்னென்ன கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்?

பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்தில் பிடிஆர் என்னென்ன கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்?
பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்தில் பிடிஆர் என்னென்ன கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்?

வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு மாநிலங்களுக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும்" என மத்திய பட்ஜெட் குறித்த ஆலோசனை கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.

2023ம் வருட பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது. கோவிட் பாதிப்பிலிருந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்திய பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், ரஷ்யா- உக்ரைன் போரால் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் விலை உலகம் முழுவதும் கடுமையாக உயர்ந்துள்ளது. எகிறும் பண வீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி பலமுறை தொடர்ச்சியாக வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளது.

இத்தகைய சூழலில், பொருளாதாரம் வளர்ச்சியை அதிகரிக்கவும் அத்துடன் விரைவாக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் துரித நடவடிக்கைகள் தேவை என கருதப்படுகிறது. மேலும் 2024ம் வருடத்திலேயே மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், இடைக்கால பட்ஜெட் மட்டுமே தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்படும். ஆகவே அடுத்த வருட நிதிநிலை அறிக்கை பொது தேர்தலுக்கு முந்தைய இறுதி பட்ஜெட்டாக மத்திய அரசுக்கு வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுக்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

இதனை தொடர்ந்து, டெல்லியில் இன்று மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், மாநிலங்களின் இக்கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய பிடிஆர், ‘நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு மாநிலங்களுக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும். தமிழகத்துக்கான ஜி்எஸ்டி இழப்பீட்டுத் தொகையான 11ஆயிரத்து 185 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

மத்திய அரசின் பங்களிப்போடு செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதால், மாநில அரசுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடைவெளியை களைய வேண்டும்.

சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணியை இரு தரப்பும் 50-50 என்ற பஙகளிப்பின் அடிப்படையிலான ஒப்புதல் அளித்து, உரிய நிதியை வரும் 2023-2024 பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். தமிழகத்துக்கு உரிய ரெயில்வே திட்டங்களை வழங்க வேண்டும்’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com