உதயநிதியின் குற்றச்சாட்டை தொடர்ந்தே நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்ய வருகிறார் - வைகோ விமர்சனம்

தந்தை பெரியார் சிலையை அவமதிப்பவர்களின் கை இருக்காது என மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வைகோ
வைகோfile

தந்தை பெரியாரின் 50 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி மதுரை சின்ன சொக்கிக்குளம் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ பேசுகையில்...

Udhayanidhi
Udhayanidhipt desk

"சமூக நீதியின் வடிவமாக தந்தை பெரியார் திகழ்கிறார். தந்தை பெரியாரை இளைஞர்கள் அதிகளவில் பின்பற்ற ஆரம்பித்து விட்டனர்" என்றார்.

சமீப காலமாக தந்தை பெரியார் சிலை அவமதிப்பு அதிகளவில் நடைபெறுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ”தந்தை பெரியார் சிலையை திட்டமிட்டு ஒரு கூட்டம் அவமதிப்பு செய்கிறது. அதற்கு தகுந்த பதிலடியை நாங்கள் கொடுத்துள்ளோம்.

வெளிப்படையாக பெரியார் சிலையை அவமதிப்பு செய்வோம் என கூறி யாராவது ஒருவர் செருப்பு மாலை போட்டு அவமதிப்பு செய்தால் அவர்கள் கை இருக்காது” என்றார்.

தொடர்ந்து அவரிடம், தமிழக தென் மாவட்டங்களில் மத்திய நிதியமைச்சர் ஆய்வு செய்ய வருவது குறித்த எழுப்பிய கேள்விக்கு...

Nirmala Sitharaman
Nirmala Sitharaman file

”மத்திய அமைச்சர்கள் தென் மாவட்ட வெள்ள பாதிப்பை பார்வையிடவில்லை என உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு தெரிவித்ததை தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தென் மாவட்டங்களில் ஆய்வு செய்ய வருகிறார்” என விமர்சனம் செய்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com