மணிப்பூர் விவகாரம்: எதிர்க்கட்சிகளை சரமாரியாக குற்றம்சாட்டிய நிர்மலா சீதாராமன்!

ஆதிச்சநல்லூரில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அமைக்கப்பட இருக்கும் அருங்காட்சியகத்துக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, தமிழ்நாடு அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ''நான் அரசியல் பேசுகிறேன் என நினைக்காதீர்கள். நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அரசியல் செய்வதால் நானும் அரசியலாக கருத்து சொல்கிறேன். 2013-இல் ஓராண்டுக்கு மேலாக மணிப்பூரில் வன்முறை நீடித்தது. காங்கிரஸ் ஆட்சியின்போது உள்துறை அமைச்சர் மணிப்பூருக்கு செல்லவில்லை. ஆனால் இப்போது அமைச்சர் அமித் ஷா சென்று வந்து அறிக்கை சமர்ப்பித்தால் அதை ஏற்க மறுக்கின்றனர். பிரதமர் தான் பதில் அளிக்க வேண்டும் என எதிர்கட்சியினர் கூறுகின்றனர்'' என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com