அதிமுகவுடனான முறிவு: பாஜக மேலிடத்தில் நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல்

கூட்டணியிலிருந்து அ.தி.மு.க பிரிந்து சென்றது ஏன் என்று பாஜக மேலிடத்தில் அறிக்கை அளித்திருக்கிறார் நிர்மலா சீதாராமன். அதிமுக இன்றி பாஜகவால் வலுவான கூட்டணி அமைக்க முடியுமா என்றும் நிர்மலா சீதாராமன் அறிக்கையில் தகவல்.
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன் PT

அண்ணாமலைக்கும் அதிமுகவுக்கும் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் குறித்தும் நிர்மலா சீதாராமன் பாஜக மேலிடத்தில் அறிக்கை தாக்கல்.

அதிமுக- பாஜக கூட்டணி முறிந்தது முதல் பல்வேறு அனுமானங்கள், விமர்சனங்களை பார்த்து வருகிறோம். அதிமுகவை மீண்டும் கூட்டணியில் இணைப்பது குறித்து பாஜக முயற்சி எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கூட்டணி முறிவு குறித்து நிர்மலா சீதாராமன் அறிக்கை ஒன்றை பாஜக மேலிடத்தில் சமர்ப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதில் சொல்லப்பட்டது என்ன?

இந்த அறிக்கையில் அதிமுக, பாஜகவுடன் இணைந்திருந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்றும் அதிமுக பிரிந்து சென்றதால், தனியாக பாஜகவால் வெற்றிபெறமுடியுமா? என்றும் பல்வேறு தகவல்களை, பாஜகவின் பல மாவட்ட தலைவர்களிடமிருந்து பெற்று அதனைக்கொண்டு அறிக்கை தயார் செய்து நிர்மலா சீதாராமன் கட்சியின் மேலிடத்தில் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com