“இது ஜனசங்கம் காலம் முதல் எங்களின் கொள்கை” - நிர்மலா சீதாராமன் விளக்கம்

“இது ஜனசங்கம் காலம் முதல் எங்களின் கொள்கை” - நிர்மலா சீதாராமன் விளக்கம்

“இது ஜனசங்கம் காலம் முதல் எங்களின் கொள்கை” - நிர்மலா சீதாராமன் விளக்கம்
Published on

மத்திய பாஜக அரசு 100 நாட்களில் சாதித்தது என்ன என்பது குறித்து நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். 

இதுகுறித்து கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தேர்தல் வாக்குறுதியில் கூறியப்படி சிறப்பு அதிகாரம் சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் கருத்தை கேட்டே நீக்கம் செய்துள்ளோம். ஒரு சட்டம் இருக்கிறது என்றால் பொதுமக்களுக்கு உபயோகமாக இருக்க வேண்டும். ஆனால் 370 உபயோகமாக இல்லை. ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் இதுகுறித்து நாங்கள் கூறியுள்ளோம். இது ஜன சங்கம் காலம் முதல் எங்களின் கொள்கை. 

இதனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கான இடஒதுக்கீடு ஜம்மு- காஷ்மீரில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. பல மாநிலங்களில் இருந்தும் முதலீடு பெருகும். சிறிய வங்கிகள் இணைப்பால் பொருளாதாரம் வளர்ச்சியடையும். 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை அடைய சிறிய வங்கிகள் இணைப்பு உதவும். பொருளாதாரம் வேகமாக வளர ஜிஎஸ்டியும் உதவும். முத்தலாக் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பெண்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. 

ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1.95 கோடி வீடுகள் அடுத்த 2 ஆண்டுகளில் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆயுஸ்மான் பாரத் திட்டத்தில் குறைந்த ப்ரீமியத்தில் உயரிய சிகிச்சையை ஏழைகள் பெறுகின்றனர். 41 லட்சம் பேர் இதுவரை இந்தத் திட்டத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர். 

விவசாயிகளுக்கு நிதியுதவி அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம், தவிர ஓய்வூதியமாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படுகிறது. அவசியமற்ற 58 சட்டங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. ஃபிட் இந்தியா திட்டத்தின் கீழ் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியத்தை பராமரிக்க ஊக்கமளிக்கப்படும்” எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com