நிர்மலா தேவி விவகாரம் - இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல்

நிர்மலா தேவி விவகாரம் - இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல்

நிர்மலா தேவி விவகாரம் - இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல்
Published on

கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த முயன்ற விவகாரத்தில் இறுதி குற்றப்பத்திரிக்கையை சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் தாக்கல் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் பயிலும் மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த அழைத்த விவகாரத்தில் பேராசிரியர்கள் நிர்மலாதேவி, முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த மூவர் மீதும் கடந்த ஜூலை 13ம் தேதி ஆயிரத்து 160 பக்கங்கள் கொண்ட முதல் கட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த நிலையில், 200 பக்கங்கள் கொண்ட கூடுதல் மற்றும் இறுதி கட்ட குற்றப்பத்திரிக்கையை சி.பி.சி.ஐ.டி துணை காவல் கண்காணிப்பாளர் கருப்பையா விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். குற்றப்பத்திரிக்கையில் 3 பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நிர்மலா தேவியிடம் எடுக்கப்பட்ட குரல் மாதிரி சோதனை அறிக்கைகளும், செல்போன் உரையாடல் உள்ளிட்ட விசாரணை ஆவணங்களும் குற்றப்பத்திரிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com