கேரளாவில் கட்டுக்குள் வந்தது நிபா.. தமிழக எல்லையில் முகாம்கள் நிறைவு..!

கேரளாவில் கட்டுக்குள் வந்தது நிபா.. தமிழக எல்லையில் முகாம்கள் நிறைவு..!
கேரளாவில் கட்டுக்குள் வந்தது நிபா.. தமிழக எல்லையில் முகாம்கள் நிறைவு..!

கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதல் கட்டுக்குள் வந்ததாக கிடைத்த தகவலை அடுத்து, தமிழக கேரள எல்லைகளில் நடைபெற்று வந்த நிபா வைரஸ் நோய் தடுப்பு முகாம் நிறைவுபெற்றது.

கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து கேரளாவின் அண்டை மாநிலமான தமிழகத்திலும் இந்த வைரஸ் தாக்குதல் பரவாமல் தடுக்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் ஒருபகுதியாக தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய பகுதிகளான குமுளி மலை அடிவாரம், லோயர்கேம்ப், கம்பம்மெட்டு, போடிமெட்டின் முந்தல் சோதனைச்சாவடி ஆகிய பகுதிகளில் கடந்த ஜூன் 5-ம் தேதி சிறப்பு மருத்துவ முகாம் துவக்கப்பட்டது.

தேனி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் துவக்கப்பட்ட இந்த முகாமில், கேரளாவில் இருந்து வரும் பேருந்துகள் உள்ளிட்ட இதர வாகனங்களில் வருவோரில் காய்ச்சல் உள்ளவர்கள் கேட்டறியப்பட்டனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு விலையில்லா நோய் தடுப்பு மருந்துகளும் வழங்கப்பட்டன.  தொடர் காய்ச்சல் இருப்போர் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைகாக அனுமதிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதல் குறித்தும் அது பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.


 
இந்நிலையில், தமிழக கேரள எல்லை இணைப்பு பகுதிகளில் வரும் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிபா வைரஸ் நோய் தடுப்பு முகாம் 20 நாட்களுக்குப்பின் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளன. கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதை அடுத்து, தேனி மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவ முகாம்களை நிறைவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com