வறட்சியின் பிடியில் விளைநிலங்கள் - காஞ்சிபுரத்தில் 99% ஏரிகள் வறண்டன

வறட்சியின் பிடியில் விளைநிலங்கள் - காஞ்சிபுரத்தில் 99% ஏரிகள் வறண்டன

வறட்சியின் பிடியில் விளைநிலங்கள் - காஞ்சிபுரத்தில் 99% ஏரிகள் வறண்டன
Published on

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆயிரத்து 22 ஏரிகளில், ஆயிரத்து 17 ஏரிகள் முற்றிலும் வறண்டுவிட்டன. இதனால், 2 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் விளைநிலங்கள் தரிசாக மாறும் அபாயம் உருவாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 909 ஏரிகள், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 93 ஏரிகள், சென்னையிலுள்ள 16 ஏரிகள், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 4 ஏரிகள் என மொத்தம் ஆயிரத்து 22 ஏரிகள் காஞ்சிபுரம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. அதில், தாமல், தென்னேரி, உத்திரமேரூர், பிள்ளைபாக்கம், கொ‌ளவாய், பாலூர், மணிமங்கலம், பி.வி.களத்தூர், மதுராந்தகம் உள்ளிட்ட 17 ஊர்களில் உள்ள ஏரிகள் மிகப்பெரியவை. 

தென்னேரியை நம்பி 5ஆயிரத்து 858 ஏக்கரும், உத்திரமேரூர் ஏரியை நம்பி 5ஆயிரத்து 636 ஏக்கரிலும் சாகுபடி நடைபெறும். 4ஆயிரத்து 188 ஏக்கர் விளைநிலத்திற்கு மாமண்டூர் ஏரியே ஜீவாதாரம். மதுராந்தகம், தாமல், பாலூர் ஏரிகளை நம்பி தலா 2ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் உள்ளன. மற்ற ஏரிகளின் தண்ணீரை பயன்படுத்தி தலா ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்களில் சாகுபடி நடைபெறும். 

இந்தநிலையில், நத்தப்பேட்டை, கலியனூர், கூடுவாஞ்சேரி, நின்னக்கரை, கொளவாய் என 5 ஏரிகளில் மட்டுமே தண்ணீர் உள்ளது. அதுவும் 25 சதவீதம் அளவிற்கே தண்ணீர் உள்ளது. மீதமுள்ள ஆயிரத்து 17 ஏரி‌களும் தண்ணீர் இன்றி வறண்டுவிட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரி என்ற பெருமையைக் கொண்ட உத்திரமேரூர் ஏரி சிறு குட்டைபோல் காட்சியளிக்கிறது. மொத்தத்தில் ஏரிகளின் மாவட்டம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் தண்ணீருக்காக ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com