\
மீட்புப் போராட்டம்: குழிக்குள் இறங்க மேலும் 9 வீரர்கள் தேர்வு

மீட்புப் போராட்டம்: குழிக்குள் இறங்க மேலும் 9 வீரர்கள் தேர்வு

மீட்புப் போராட்டம்: குழிக்குள் இறங்க மேலும் 9 வீரர்கள் தேர்வு
Published on

குழந்தை சுர்ஜித்தை குழிக்குள் இறங்கி மீட்பதற்காக மேலும் 9 தீயணைப்பு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் 63 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. கடினமானப் பாறைகள் இருப்பதால் குழிதோண்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இப்போது மீட்புப் பணி 4 வது நாளாகத் தொடர்ந்து நடந்து வருகிறது.

சுர்ஜித்தை குழிக்குள் இறங்கி மீட்பதற்கான பணியில் ஏற்கெனவே 3 தீயணைப்பு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். கண்ணதாசன், திலீப்குமார், மணிகண்டன் ஆகிய அந்த வீரர்களுக்கு குழிக்குள் இறங்குவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் அவர்களுடன் மேலும் 9 தீயணைப்பு படை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com