காட்டு யானை தாக்கி இளைஞர் பலிpt desk
தமிழ்நாடு
நீலகிரி: காட்டு யானை தாக்கி இளைஞர் பலி
கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: மகேஷ்வரன்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட 3வது டிவிசன் பகுதியைச் சேர்ந்தவர் ஜிம்ஷித் (37). காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியாக உள்ள இவர், நேற்று இரவு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
Deathpt desk
இதனை அடுத்து அவரது உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் அவரை தேடியுள்ளனர். அப்போது அவர், காட்டு யானை தாக்கி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து உடல் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.