நீலகிரி: காட்டு யானை அச்சத்தால் தேர்வு எழுத முடியாமல் வீட்டில் முடங்கிய மாணவிகள்!

நீலகிரி: காட்டு யானை அச்சத்தால் தேர்வு எழுத முடியாமல் வீட்டில் முடங்கிய மாணவிகள்!

நீலகிரி: காட்டு யானை அச்சத்தால் தேர்வு எழுத முடியாமல் வீட்டில் முடங்கிய மாணவிகள்!

காட்டு யானை அச்சுறுத்தல் காரணமாக ஆரோட்டுபாறை பகுதியை சேர்ந்த 2 பத்தாம் வகுப்பு மாணவிகள் பொதுத்தேர்வு எழுதாமல் வீட்டில் முடங்கினர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஆரோட்டுபாறை பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவரை இன்று காலை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனந்தை தாக்கிய யானை அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் வழியாக சென்று அங்கு உள்ள தேயிலை தோட்டம் ஒன்றில் தஞ்சம் அடைந்தது. இதையடுத்து யானை வழக்கமாக செல்லும் வழியில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. பிரகாஷின் இரண்டு பெண் மகள்கள் ரஷ்மிதா மற்றும் பிரவீனா ஆகியோர் தற்சமயம் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை தேர்வெழுத தயாராக இருந்த அவர்களது வீட்டு வழியாக சென்ற காட்டு யானை அவர்களின் வீடு அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் தஞ்சம் அடைந்திருந்தது. தேர்வுக்குச் செல்ல நேரம் ஆன நிலையில் காட்டு யானை எந்நேரமும் வரலாம் என்ற அச்சத்தில் மாணவிகள் இருவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். தொடர்ந்து காட்டு யானை அதே பகுதியில் முகாமிட்டு இருந்ததால் அவர்களால் குறித்த நேரத்திற்கு தேர்வெழுத செல்ல முடியவில்லை.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு படித்து தயாராக இருந்த நிலையில் காட்டு யானை அச்சுறுத்தால் இரண்டு மாணவிகள் தேர்வெழுத முடியாமல் போனது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரிதிடம் கேட்டபோது, நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டு இருக்கிறேன். பொதுத் தேர்வு என்பதால் சென்னையில் உள்ள கல்வித்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படியே தேவையான மாற்று நடவடிக்கை எடுக்க முடியும். உயரதிகாரிகளின் ஆலோசனைக்கு ஏற்ப மாற்று நடவடிக்கை எடுக்கப்படுமென கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com