\
நீலகிரி: கொம்பன் யானை சங்கரை பிடிக்க களமிறக்கப்பட்ட இரட்டையர் விஜய் - சுஜய்!

நீலகிரி: கொம்பன் யானை சங்கரை பிடிக்க களமிறக்கப்பட்ட இரட்டையர் விஜய் - சுஜய்!

நீலகிரி: கொம்பன் யானை சங்கரை பிடிக்க களமிறக்கப்பட்ட இரட்டையர் விஜய் - சுஜய்!
Published on

நீலகிரி மாவட்டம் சேரம்பாடியில் சுற்றிவரும் கொம்பன் யானை சங்கரை பிடிக்கும் பணியில் இரட்டையர்களான விஜையும் சுஜையும் களமிறங்கி இருக்கிறார்கள். விஜய் சுஜய் இந்த பெயரை கேட்டாலே தமிழக கேரள வனத்தை ஒட்டிய கிராமங்கள் அதிரும். இவர்களை பார்த்தாலே காட்டு யானைகள் அஞ்சி பதுங்கும். ஒன்றுபோல் இருப்பது பெயர்மட்டுமல்ல உருவமும்தான். 1971ஆம் ஆண்டு தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தேவகி என்ற யானைக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த யானைகள்தான் விஜையும் சுஜையும். தற்போது இந்த இரட்டையர்கள் கொம்பனை பிடிக்கும் பணியில் களமிறக்கப்பட்டுள்ளனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com