யானை
யானைபுதிய தலைமுறை

“நீ மேல ஏறி வாடா கண்ணு...” - உருகவைத்த யானையின் தாய்ப்பாசம்!

நீலகிரி கூடலூர் கேரளா நெடுஞ்சாலையில் தடுப்புச் சுவரை கடக்கமுடியாமல் தவித்த குட்டியானையை பத்திரமாக மேலே ஏற்றி அழைத்துச்சென்ற தாய் யானையின் செயல் பார்ப்போரை மனமுருகச்செய்தது.
Published on

காட்டு யானை கூட்டம் ஒன்று கேரள மாநிலம் மலப்புரம் செல்லும் சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்ல நினைத்தது. அப்பொழுது கூட்டத்திலிருந்த குட்டி யானை ஒன்று சாலை ஓரத்தில் இருந்த தடுப்பை கடக்க முடியாமல் தவித்தது.

அந்நேரம் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், குட்டி யானை தடுப்பை தாண்டி செல்லும் வரையில் காத்திருந்தனர். ஒரு கட்டத்தில் தாய் யானை தனது தும்பிக்கையால் குட்டி யானையைத் தூக்கி தடுப்பில் ஏற்றிவிட்டு வனப்பகுதிக்குள் அழைத்துச்சென்றது. இது காண்போரை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது

யானை
கோவை: தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் யானை பரிதாப பலி – ரயில்கள் வேகமாக இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com