\
நீலகிரி: குன்னூரை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி: குன்னூரை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி: குன்னூரை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Published on

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒருமணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக காலை மற்றும் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வந்த நிலையில், மாலை நேரங்களில் அவ்வப்போது மேக மூட்டத்துடன் லேசான சாரல் மழை பெய்து வந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை முதல் கருமையான மேக மூட்டம் காணப்பட்டு வந்த நிலையில், மாலை நேரத்தில் சிறிது நேரம் பேரக்ஸ், குன்னூர், பெட்போர்டு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழைப் பெய்த நிலையில், திடீரென இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com