சாய்பாபா கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
சாய்பாபா கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்pt desk

நீலகிரி | எடப்பள்ளி சாய்பாபா கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் எடப்பள்ளியில் உள்ள சாய்பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
Published on

செய்தியாளர்: ஜான்சன்

நீலகிரி மாவட்டம் உதகைக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக வருகை புரிந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின், நேற்று முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமிற்குச் சென்றார். அங்கு வளர்ப்பு யானைகள் முகாமை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து இன்று உதகையில் புதிதாக துவக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

சாய்பாபா கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
ராணிப்பேட்டை | கோயில் திருவிழாவில் விபரீதம் - பக்தர்களை துரத்தி துரத்தி கொட்டிய தேனீக்கள்

இதனிடையே தமிழக முதல்வருடன் உதகைக்கு வருகை புரிந்துள்ள அவரது மனைவி துர்கா ஸ்டாலின் குன்னூர் அருகே உள்ள எடப்பள்ளி சாய்பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் நடிகை சரண்யாவும் வந்திருந்தார். சாமி தரிசனத்திற்குப் பின்பு கார் மூலம் உதகைக்கு புறப்பட்டுச் சென்றார்....

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com