\
தொழில் மீது இருந்த மரியாதை! நெகிழ வைத்த ஆட்டோ ஓட்டுநரின் செயல்

தொழில் மீது இருந்த மரியாதை! நெகிழ வைத்த ஆட்டோ ஓட்டுநரின் செயல்

தொழில் மீது இருந்த மரியாதை! நெகிழ வைத்த ஆட்டோ ஓட்டுநரின் செயல்
Published on

திருமணம் முடிந்த கையோடு தனது மனைவியை ஆட்டோவில் அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநரை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மண்வயல் பகுதியைச் சேர்ந்தவர் மனு. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர், கடந்த 5 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் இன்று இவருக்கு கடலூரைச் சேர்ந்த விஜய சங்கரி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து திருமணம் முடிந்த கையோடு அலங்கரிக்கப்பட்ட தனது ஆட்டோவில் மனைவியை அமர்த்தி வீட்டிற்கு அழைத்துச் சென்றார். செய்யும் தொழில் மீது கொண்ட மரியாதை காரணமாக இவ்வாறு செய்ததாக ஆட்டோ ஓட்டுனர் மனு தெரிவித்தார்.

திருமணம் முடிந்த கையோடு மனைவியை அலங்கரிக்கப்பட்ட ஆட்டோவில் அழைத்துச் சென்ற மனுவின் செயலை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com