\
பேருந்தை பார்த்து பீறிட்டு கத்திய ஒற்றை காட்டு யானை... அலறிய பயணிகள்!

பேருந்தை பார்த்து பீறிட்டு கத்திய ஒற்றை காட்டு யானை... அலறிய பயணிகள்!

பேருந்தை பார்த்து பீறிட்டு கத்திய ஒற்றை காட்டு யானை... அலறிய பயணிகள்!
Published on

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கெத்தை வழியாக காேவை செல்லும் சாலையின் ஓரத்தில் நின்ற ஒற்றை காட்டுயானை அரசு பேருந்தைப் பார்த்து பிளிறியது. இது பேருந்து பயணிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

நீலகிரி மாவட்டத்தில் இருந்து கோவை செல்லும் மாற்று வழியான மஞ்சூர், கெத்தை சாலை உள்ளது. இங்கு கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த ஒற்றை காட்டு யானை சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தைப் பார்த்து பிளிறியது. இதனால் பேருந்து பயணிகள் அச்சமடைந்தனர்.

சாலை ஓரங்களில் பலாப் பழம் உள்ளிட்ட பல்வேறு பழங்கள் விளைந்துள்ளதால், இவற்றை உண்பதற்காக காட்டு யானைகள் அடிக்கடி சாலையில் முகாமிட்டு வருகின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

- செய்தியாளர்: ஜான்சன்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com