நீலகிரி: ஒரே பிரசவத்தில் 12 குட்டிகளை ஈன்ற பொமேரியன் நாய்

நீலகிரி: ஒரே பிரசவத்தில் 12 குட்டிகளை ஈன்ற பொமேரியன் நாய்

நீலகிரி: ஒரே பிரசவத்தில் 12 குட்டிகளை ஈன்ற பொமேரியன் நாய்
Published on

கூடலூரில் வீட்டில் வளர்க்கப்படும் பொமேரியன் வகையைச் சேர்ந்த நாய் ஒரே பிரசவத்தில் 12 குட்டிகளை ஈன்றுள்ளது.

நீலகிரி மாவட்டம் ராஜகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சேவியர். இவர், தனது வீட்டில் பொமேரியன் வகையைச் சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அந்த நாய் நேற்று ஒரே பிரசவத்தில் 12 குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் மூன்று குட்டிகள் உயிரிழந்த நிலையில் தற்சமயம் 9 குட்டிகள் நல்ல உடல்நிலையுடன் உள்ளன.

பொமேரியன் வகையைச் சேர்ந்த நாய்கள் ஒரே பிரசவத்தில் 12 குட்டிகளை ஈன்றெடுப்பது அரிதான நிகழ்வு என நாயின் உரிமையாளர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் நாய் குட்டிகளை ஆச்சரியமாக பார்த்துச் செல்கின்றனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com