முழு அடைப்பு போராட்டம்
முழு அடைப்பு போராட்டம்pt desk

நீலகிரி | இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு... முழு அடைப்பு போராட்டம் - சுற்றுலா பயணிகள் அவதி

நீலகிரியில் வெறிச்சோடிய சுற்றுலாத் தலங்கள், சுற்றுலா வந்தவர்களுக்கு உணவு கிடைக்காமல் அவதியடைந்தனர்.
Published on

செய்தியாளர்: ஜான்சன்

நீலகிரி மாவட்டத்தில் இ பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் 24 மணி நேர முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்தருந்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து கடைகள், உணவகங்கள், சுற்றுலா வாகனங்கள், ஆட்டோக்கள் இன்று இயங்காததால் நகர் பகுதி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

நீலகிரியில் இ பாஸ் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களும், வாரஇறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் 24மணி நேர முழு அடைப்பிற்கு அழைப்பிற்கு விடுக்கப்ட்டிருந்தது,

முழு அடைப்பு போராட்டம்
’ திமுக கரை வேட்டி கட்டினால் நெற்றிப்பொட்டை அழித்துவிட வேண்டும் ’ - ஆ.ராசா

இதன் தொடர்ச்சியாக இன்று காலை உதகை, குன்னூர், காதே;தகிரி, கூடலூர் பானே;றப் பகுதிகளில் கடைகள், வர்தக நிறுவனங்கள், சுற்றுலா வாகனங்கள், உள்ளிட்டவை இயங்காததால் நகர் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com