"தேன் வார்த்த ஊதா பூவே..."- கொடைக்கானலில் கோடையை வரவேற்கும் ஜெகரண்டா மலர்கள்!

"தேன் வார்த்த ஊதா பூவே..."- கொடைக்கானலில் கோடையை வரவேற்கும் ஜெகரண்டா மலர்கள்!
"தேன் வார்த்த ஊதா பூவே..."- கொடைக்கானலில் கோடையை வரவேற்கும் ஜெகரண்டா மலர்கள்!

கோடைக்காலம் வரவிருப்பதை அறிவிக்கும் வகையில், நீலகிரியில் ஜெகரண்டா மலர்கள் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பூத்துக் குலுங்கத் துவங்கியுள்ளன.

தமிழகத்தில் கோடைக்காலம் வரவிருப்பதை அறிவிக்கும் வகையில், நீலகிரியில் ஜெகரண்டா மலர்கள் தற்போது பூத்துக் குலுங்கத் துவங்கியுள்ளது. குளிர்காலத்தில் மரங்களில் உள்ள இலைகள் முழுவதும் உதிர்ந்த நிலையில், கோடைக்காலம் துவங்கும் இந்த மார்ச் மாதத்தில் மரங்கள் அனைத்திலும் ஜெகரண்டா மலர்கள் கொத்துக் கொத்தாக பூத்துக் குலுங்கியுள்ளது.

குறிப்பாக பெருமாள்மலை வனப் பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள மரங்களில் ஊதா - Violet நிறத்தில் மரம் முழுவதும் இந்த மலர்கள் பூத்துக் குலுங்கத் துவங்கியுள்ளன. நெடுஞ்சாலையில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வரும் இந்த மலர்கள் மார்ச் மாதம் முழுவதும் பூத்துக் குலுங்கும் என்றும், அதன் பின்னர் மலர்கள் அனைத்தும் உதிர்ந்து மீண்டும் இலைகள் துளிர்க்கும் என்றும் வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com