மக்களவைத் தேர்தல் 2024: பஜ்ஜி சுட்டு வாக்கு சேகரித்த நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளர்! #Video

கூடலூரில் பஜ்ஜி சுட்டு மக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பில் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஈடுபட்டார்.
பஜ்ஜி சுட்ட அதிமுக வேட்பாளர்
பஜ்ஜி சுட்ட அதிமுக வேட்பாளர்pt desk

செய்தியாளர்: மகேஷ்வரன்

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை முதல் வாக்கு சேகரித்து வருகிறார். மக்கள் மத்தியில் கூடலூரில் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்து பிரசாரம் செய்தார்.

ADMK Candidate
ADMK Candidatept desk

இதில் மேல்கூடலூர் பகுதியில் மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்த அவர், கடைகளுக்குச் சென்று நோட்டீஸ் கொடுத்து வாக்கு சேகரித்தார்.

பஜ்ஜி சுட்ட அதிமுக வேட்பாளர்
”நாங்க போட்ட பிச்சை.. பூத்ல ஆள் இருக்கா?” – பாஜகவை காட்டமாக விமர்சனம் செய்யும் அதிமுக தலைவர்கள்!

அப்போது அங்குள்ள டீக்கடைக்கு சென்ற அவர், பஜ்ஜி சுட்டப்படியே அங்கிருந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார். இதை அப்பகுதி மக்கள் பார்த்து ரசித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com