நீலகிரியில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் - ஏன் தெரியுமா?

நீலகிரியில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் - ஏன் தெரியுமா?
நீலகிரியில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் - ஏன் தெரியுமா?

நீலகிரி மாவட்டத்தில் விற்கப்படும் ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்க டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "நீலகிரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்க வேண்டும். வெற்று பாட்டிலை வாடிக்கையாளர்கள் ஒப்படைக்கும்போது 10 ரூபாயை திரும்ப வழங்க வேண்டும். அதற்கான வசதியை ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் ஏற்படுத்த வேண்டும்" என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி போன்ற மலைப்பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை ஏன் செயல்படுத்தகூடாது என அண்மையில் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தற்போது இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com