தமிழ்நாடு
மதுவிலக்குக்காக போராடும் தமிழக சிறுவனுக்கு பீகார் முதலமைச்சர் வாழ்த்து
மதுவிலக்குக்காக போராடும் தமிழக சிறுவனுக்கு பீகார் முதலமைச்சர் வாழ்த்து
மதுவிலக்குக்காக போராடி வரும் சிறுவன் ஆகாஷுக்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்க பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் சென்னை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், தமிழகத்தில் மதுவிலக்குக்காக குரல் கொடுக்கும் படூரை சேர்ந்த சிறுவன் ஆகாஷுக்கு வாழ்த்து தெரிவித்தார். தந்தை மதுக்குடிப்பதால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுவதாக சிறுவன் ஆகாஷ் தெரிவித்திருந்தான். தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடும் வரை காந்திய வழியில் போராட்டம் தொடரும் என கூறி ஆகாஷ் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறான்.