Police securitypt desk
தமிழ்நாடு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் என்ஐஏ சோதனை: சென்னை தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் என்ஐஏ சோதனை நடைபெறுவதால், சென்னை தலைமை அலுவலகத்திற்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் 24 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் மில்லர் சாலையில் அமைந்துள்ள தேசிய புலனாய்வு முகமை தலைமை அலுவலகத்திற்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
NIA officept desk
குறிப்பாக எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதால், எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் தடுப்பதற்காக 20 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.