"நாம் தமிழர் கட்சியினர் தேசத்திற்கு எதிராக செயல்பட்டது என்ஐஏ சோதனை மூலம் தெரிகிறது" – எல்.முருகன்

"நாட்டை பாதுகாக்கும் முக்கிய அமைப்பான என்.ஐ.ஏ, நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக செயல்படுவோரை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. தனது வேலையை சிறப்பாக செய்து வருகிறது" என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
L.Murugan
L.Muruganfile

செய்தியாளர்: ஐஸ்வர்யா

மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் எல்.சந்தோஷ் ஆகியோர் கோவை விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

கோவை நாடாளுமன்ற கூட்டம் குறித்து பேசுகையில், ”தேசிய தலைவர்கள் வருகை தருவதாலும் நிர்வாக வசதிக்காகவும் அருகாமையில் என்ற அடிப்படையில் பாராளுமன்ற கூட்டம் கோவையில் இரண்டாவது முறையாக நடக்கிறது. தமிழகத்தில் தேர்தல் வேலைகளை முடுக்கி விடவும், தேர்தல் தயாரிப்புகள், அறிவுரைகள் வழங்கவும் இந்த கூட்டம் நடைபெறுகிறது. கூட்டணி குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் தேசிய தலைமை அறிவிக்கும்.

NIA
NIAPT DESK

மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் நின்றால் அதற்கான பணியை செய்யவும் தயாராக உள்ளோம்.

விஜய் புதிய கட்சி தொடங்கினாலும், நாடாளுமன்ற தேர்தலில் அவர், பார்வையாளராக இருப்பார் என அவரே சொல்லிவிட்டார். நாடாளுமன்ற தேர்தலில் அவருடைய பங்கு குறைவாக தான் இருக்கும். கடந்த 2014 தேர்தலில் பாஜக தலைமையிலான 19 சதவீத வாக்குகள், தர்மபுரி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றதை பார்த்தோம்.

மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் நின்றால் அதற்கான பணியை செய்யவும் தயாராக உள்ளோம்.

விஜய் புதிய கட்சி தொடங்கினாலும், நாடாளுமன்ற தேர்தலில் அவர், பார்வையாளராக இருப்பார் என அவரே சொல்லிவிட்டார். நாடாளுமன்ற தேர்தலில் அவருடைய பங்கு குறைவாக தான் இருக்கும். கடந்த 2014 தேர்தலில் பாஜக தலைமையிலான 19 சதவீத வாக்குகள், தர்மபுரி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றதை பார்த்தோம். அதிமுக, திமுக தலைமையில் இல்லாத கட்சிகள் தமிழகத்தில் வர முடியாது என்பது ஏற்கனவே பொய்யாகி இருக்கிறது” என்றார்.

அதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த எல்.முருகன், “நாம் தமிழர் கட்சியினர் தேசத்திற்கு எதிராக செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை இந்த சோதனைகள் காட்டுகிறது. இது வருத்தம் அளிக்கிறது. தமிழக காவல்துறை இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. நாட்டை பாதுகாக்கும் முக்கிய அமைப்பான என்.ஐ.ஏ, நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக செயல்படுவோரை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. அவர்களின் வேலையை சிறப்பாக செய்து வருகிறார்கள்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com