கேரள தங்கக் கடத்தல் விவகாரம்: சென்னையில் என்ஐஏ விசாரணை !
கேரள மாநிலத்தை உலுக்கிய தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கேரள மாநிலத்தை உலுக்கிய தங்கக் கடத்தல் தொடர்பாக என்ஐஏ விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட தூதரக முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளி சந்தீப் நாயர், தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், சந்தீப் நாயன் மனைவி சௌமியா, ரமீஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சூழலில் ஆகஸ்டு 21 ஆம் தேதிவரை ஸ்வப்னா சுரேஷை நீதிமன்ற காவலில் வைக்க என்.ஐ.ஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு கொரோனோ பரிசோதனை செய்யப்பட்ட பிறகு எர்ணாகுளம் மாவட்ட சிறையில் அடைக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கேரள தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னையில் ரகசிய விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
டி.ஐ.ஜி. கல்பனா தலைமையில் சென்னையில் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், 5 அதிகாரிகள் கொண்ட குழு நேற்று காலையில் இருந்து சென்னையில் ரகசிய விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.