
காற்று மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் ஏற்பட்டுள்ள தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அனேக இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.