\
next seven days rain ulert
மழைpt web

பலத்த காற்று.. தமிழ்நாட்டில் ஒருவாரத்துக்கு மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on

தமிழ்நாட்டில் ஒரு வாரத்துக்கு மழை தொடரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாகப் பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் (சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை) மிதமான மழை பெய்யும் எனவும் நாளை மற்றும் நாளை மறுநாள் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் எனவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை
மழைpt web

வெப்பநிலையை பொறுத்தவரை வருகின்ற 27ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும் எனவும், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நான்கு நாட்களுக்கு சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com