முழு வீச்சில் தவெக? விஜய்யின் அடுத்தடுத்த நகர்வுகள் சொல்வது என்ன?
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் விஜய். 2026 இலக்கு என்பதை முன்வைத்து கட்சி தொடங்கிய விஜய், முதலாம் ஆண்டில் பெரிய நகர்வுகள் எதையும் செய்யவில்லை. அக்கட்சியின் ஒரு மாநாடும், பரந்தூர் விசிட் மட்டுமே நடைபெற்றது.
அனைத்து பிரச்னைகளுக்கும் அறிக்கை மட்டுமே வெளியிட்டு வந்த த.வெ.க. தலைவர் விஜய், இரண்டாம் ஆண்டின் தொடக்க விழாவுக்கு பிறகு வேகமெடுத்துள்ளார். குறிப்பாக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோருடனான சந்திப்புக்கு பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளன எனலாம்.
பெரிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளாத விஜய், இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வை நடத்தி பங்கேற்றார். கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்வு என்றாலும் கட்சிக் கொடிகூட நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இடம்பெறவில்லை என்பது பலரது கவனத்தை ஈர்த்தது.
இச்சூழலில், தமிழகத்தில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து மகளிர் தினத்தன்று த.வெ.க. சார்பில் மாவட்டந்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறையிடம் அக்கட்சியின் மாவட்ட பிரதிநிதிகள் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கும் சூழலில் விஜய் அரசியல் களத்தில் முழுமையாக இறங்கியுள்ளதாக இதனை கருதலாம்...