\
பெரும்பாக்கம் ஏரியில் கிடந்த பெண் சடலம் யாருடையது? - 50 திருநங்கைகளிடம் போலீஸ் விசாரணை 

பெரும்பாக்கம் ஏரியில் கிடந்த பெண் சடலம் யாருடையது? - 50 திருநங்கைகளிடம் போலீஸ் விசாரணை 

பெரும்பாக்கம் ஏரியில் கிடந்த பெண் சடலம் யாருடையது? - 50 திருநங்கைகளிடம் போலீஸ் விசாரணை 
Published on

பெரும்பாக்கத்தில் அடையாளம் தெரியாத பெண் உடல் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் திருநங்கைகள் 50 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

சென்னை பள்ளிகரணை அடுத்த பெரும்பாக்கம், வள்ளுவர் நகர் பின்புறம் உள்ள ஏரியில் நைலான் கயிற்றால் கை மற்றும் கழுத்து கட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கடந்த 21ம் தேதி மீட்கப்பட்டது. உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் அழுகி போய் இருந்ததால் முழுமையாக பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது, மீட்கப்பட்ட உடலில் கர்ப்பப்பை இல்லை என்பதால் திருநங்கையாக இருக்கலாம் என மருத்துவர்கள் போலீசாரிடம் தெரிவித்திருந்தனர். 

ஆகவே உடலின் மாதிரியை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்து அதன் முடிவிற்காக காத்திருக்கின்றனர். இருப்பினும் திருநங்கையாக இருக்கலாம் என்ற அடிப்படையில் யார் என்ற அடையாளத்தை கண்டுபிடிக்க 50 க்கும் மேற்பட்ட திருநங்கைகளிடம் பெண்ணின் போட்டோவை காண்பித்து பள்ளிகரணை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

இருப்பினும், வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் ஏரியை சுற்றி உள்ள சிசிடிவி கேமரா பதிவை தனிப்படை போலீசார் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். உடல் கண்டெடுக்கப்பட்டு 3 நாட்களுக்கு மேல் ஆகியும் யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் பள்ளிகரணை போலீசார் திணறி வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com