கடைசி நிமிடம் வரை இணைபிரியா தம்பதி - மனைவி இறந்ததும் கணவன் உயிர் பிரிந்த சோகம்
விழுப்புரத்தில் மனைவி இறந்ததும் உடனடியாகவே கணவன் உயிர் பிரிந்த சோகமான நிகழ்ந்து நடைபெற்றுள்ளது. கடைசி நிமிடம் வரை இணைபிரியா தம்பதியின் அன்பின் வெளிப்பாட்டால் கிராம மக்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்காவனம் (98), இவருடைய மனைவி எல்லம்மாள் (94). இவர்கள் இருவரும் வயது மூப்பு காரணமாக வீட்டிலேயே இருந்து வந்தனர். இவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதிகம் பாசம் கொண்டு வாழ்ந்து வந்ததை கண்டு, கிராம மக்களே வியந்தனர்.
இந்நிலையில் இன்று செல்லம்மாளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், இவருடைய மகன் செல்வராஜ் தாய் இறந்துவிட்டார், என்ற செய்தியை பூங்காவனத்திடம் கூறியுள்ளார்.
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த பூங்காவனமும் உயிரிழந்தார். இருவரின் உடலும் அவர்கள் வசித்த வீட்டிலேயே வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர், உயிரிழந்த தம்பதிகளுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். வயது முதிர்ந்தாலும் பாசம் குறைவின்றி வாழ்ந்த தம்பதிகளின் உயிர் பிரிந்ததால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.