கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நியூஸ் ஜெ எடப்பாடி செய்தியாளர் உயிரிழப்பு

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நியூஸ் ஜெ எடப்பாடி செய்தியாளர் உயிரிழப்பு
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நியூஸ் ஜெ எடப்பாடி செய்தியாளர் உயிரிழப்பு

சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டார நியூஸ் ஜெ தொலைக்காட்சி செய்தியாளர் நல்லத்தம்பி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி வெள்ளாண்டி வலசு பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி. இவர் கடந்த 25 ஆண்டுகளாக எடப்பாடி வட்டார தினத்தந்தி நாளிதழ் செய்தியாளர் ஆகவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நியூஸ்ஜெ தொலைக்காட்சி செய்தியாளராகவும் பணியாற்றி வந்தார். கடந்த 18 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நல்லத்தம்பி எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக சேலம் 3 ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவருக்கு மூச்சுத்திணறல் அதிகம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கண்கள் வீக்கமடைந்து நிறம் மாறியதாகவும் கூறப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று பிற்பகல் உயிரிழந்தார். கருப்பு பூஞ்சை தொற்று தென்பட்ட போதும் அது குறித்த பரிசோதனைக்கு முன்பாகவே நல்லதம்பியின் உயிர் பிரிந்தது தெரியவந்துள்ளது. உயிரிழந்த நல்லத்தம்பிக்கு அமராவதி என்ற மனைவியும் ரேணுகாதேவி என்ற மகள் மற்றும் பரத் என்ற மகனும் உள்ளனர்.

செய்தியாளர் நல்லதம்பி உயிரிழந்த சம்பவம் சக செய்தியாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com