விருதுநகர் அருகே திருமணமான மறுநாளே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் சுவேதாவிற்கும் (20) மானாமதுரை அழகாபுரி நகர் ராமச்சந்திரன் மகன் செல்வக்குமாருக்கும் (27) கடந்த 2 நாள்களுக்கு முன்பு நவாத்தாவில் உள்ள கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் திருமணத்திற்கு மறுநாள் புதுப்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த மானாமதுரை போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், ஆர்.டி.ஓ.,விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.