பரிதாப நிலையில் புதிதாக திறக்கப்பட்ட பல்லாவர மேம்பாலம்!

பரிதாப நிலையில் புதிதாக திறக்கப்பட்ட பல்லாவர மேம்பாலம்!

பரிதாப நிலையில் புதிதாக திறக்கப்பட்ட பல்லாவர மேம்பாலம்!
Published on

புதிதாக திறக்கப்பட்டுள்ள பல்லாவரம் மேம்பாலத்தில் பல குறைகள் இருப்பதாக வாகன ஓட்டிகள் பலரும் தெரிவிக்கின்றனர்.

சென்னை பல்லாவரம் மேம்பாலம் 82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. கடந்த 4 வருடங்களாக கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தை நேற்று மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். இதனால் வாகன ஓட்டிகள் மகிச்சி அடைந்தனர். குரோம்பேட்டையில் இருந்து விமான நிலையம் செல்லும் வகையில் ஒருவழிப்பாதையாக தற்போது இந்த பாலம் இயங்கி வருகிறது. ஒன்றரை கிலோமீட்டருக்கு நீண்ட வழிப்பாதையாக இருக்கும் இந்த பாலத்தில் ஒரு சில குறைகள் இருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், “பாலம் சமதளமாக இல்லை. ஆங்காங்கே மேடு பள்ளமாக இருக்கிறது. தார் சாலையும் சரியாக போடவில்லை. சாலைகளை முறையாக அமைக்காததால் கற்கள் பெயர்ந்து வருகின்றன. ஆங்காங்கே ஜல்லி கற்கள் மேலே நீட்டிக்கொண்டு இருக்கிறது. இந்த பாலத்தை இருவழி பாதையாக மாற்ற வேண்டும். விமான நிலையத்தில் இருந்து குரோம்பேட்டை செல்லும் வாகன ஓட்டிகளும் இந்த பாலத்தை பயன்படுத்தும் வகையில் மாற்ற வேண்டும். இதைவிட குறைந்த அளவு அகலம் கொண்ட பாலங்கள் எல்லாம் இருவழி பாதையாக இருக்கும்போது இந்த பாலத்தை ஏன் மாற்றக்கூடாது” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலை அதிகாரிகளிடம் தெரிவித்தபோது, குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு விரைவில் புதிய பணிகள் செய்யப்பட்டு சரிசெய்யப்படும் எனத் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com