நாங்குநேரி, விக்கிரவாண்டி அதிமுக எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் அறையில் பதவியேற்பு 

நாங்குநேரி, விக்கிரவாண்டி அதிமுக எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் அறையில் பதவியேற்பு 

நாங்குநேரி, விக்கிரவாண்டி அதிமுக எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் அறையில் பதவியேற்பு 
Published on

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று பதவியேற்று கொண்டனர்.

தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் அறையில், விக்கிரவாண்டி எம்.எல்.ஏவாக முத்தமிழ்ச்செல்வனும், ‌நாங்குநேரி எம்.எல்.ஏவாக ரெட்டியார்பட்டி நாராயணனும் பதவியேற்றனர். இடைத்தேர்தல் வெற்றி முடிவுகள் 24ஆம் தேதி வெளியானநிலையில், இருவரும் கடந்த 29ஆம் தேதி பதவியேற்பதாக இருந்தது. 

இந்தநிலையில், நடுக்காட்டுப்பட்டியில், ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை சுஜித் மீட்புப்பணியில் அரசு முழுவீச்சில் ஈடுபட்டிருந்ததால், பதவியேற்பு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. பதவியேற்புக்கு முன்னதாக முத்தமிழ்ச்செல்வன், ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் மெரினா கடற்கரையிலுள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். எம்.எல்.ஏக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும்‌ அஞ்சலி செலுத்தினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com