\
ஆற்றில் கிடந்த பெண் குழந்தையின் சடலம் : தொடரும் துயரம்..!

ஆற்றில் கிடந்த பெண் குழந்தையின் சடலம் : தொடரும் துயரம்..!

ஆற்றில் கிடந்த பெண் குழந்தையின் சடலம் : தொடரும் துயரம்..!
Published on

திண்டிவனம் அருகே உள்ள தொண்டி ஆற்றில் பிறந்து சில மணி நேரமான பெண் குழந்தையின் சடலம் சிதைந்த நிலையில் மீட்புக்கப்பட்டது. 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பாதிராப்புலியூர் கிராமத்தில் உள்ள தொண்டி ஆற்றில் பிறந்து சில மணி நேரமான பெண் குழந்தையின் சடலம் அடித்து வந்துள்ளது. அத்துடன் குழந்தையின் உடல் சிதைந்து இருந்துள்ளது. இதைக்கண்ட பொதுமக்கள் மயிலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் ப‌ரிசோதனை‌க்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறந்த சில மணி நேரங்களில் பெண் குழந்தையை வீசிய இறக்கமற்ற நபர் யார் ? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் குழந்தை என்பதால் தூக்கி வீசப்பட்டதா ? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com