சென்னையில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்

சென்னையில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்

சென்னையில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்
Published on

சென்னையின் மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரைகளில் திரண்டிருந்த ஏராளமான பொது மக்கள் புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

சென்னையின் மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரைகளில் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். புத்தாண்டு பிறந்ததும் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடிய மக்கள், இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தங்களது வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட இளைஞர்கள், உற்சாகமிகுதியில் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை பகுதி, நட்சத்திர விடுதிகள் கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றிலும் புத்தாண்டு கொண்டாட்டம் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டது. பல்வேறு இடங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சென்னை மாநகரம், புத்தாண்டையொட்டி திருவிழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com