புத்தாண்டு இரவில் சென்னையின் இந்த ’பீச்’ பகுதியில் கூட அனுமதி இல்லை - காவல்துறை அறிக்கை

புத்தாண்டு இரவில் சென்னையின் இந்த ’பீச்’ பகுதியில் கூட அனுமதி இல்லை - காவல்துறை அறிக்கை
புத்தாண்டு இரவில் சென்னையின் இந்த ’பீச்’ பகுதியில் கூட அனுமதி இல்லை - காவல்துறை அறிக்கை

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பை கருதி இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று (29.12.2022) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பினையடுத்து, கடற்கரை மணற்பரப்பில் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக பொதுமக்களால் எழுப்பப்பட்ட சந்தேகங்களை தொடர்ந்து, கீழ்கண்டவாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், “வருகின்ற 2023ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 31.12.2022 அன்று, இரவு 08.00 மணிக்கு மேல், சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட மெரினா, சாந்தோம், பெசன்ட்நகர் எலியட்ஸ், நீலாங்கரை, பாலவாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட அனைத்து கடற்கரை மணற்பகுதிகள் மற்றும் கடற்கரை ஓரங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.



ஆகவே, பொதுமக்கள் 31.12.2022 அன்று இரவு 08.00 மணிக்கு மேல் கடற்கரை மணற் பகுதிக்கு வரவேண்டாம் எனவும், பொதுமக்களின் பாதுகாப்பை கருதி மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com