\
மனோன்மணியம் பல்கலை.துணை வேந்தராக பிச்சுமணி நியமனம்!

மனோன்மணியம் பல்கலை.துணை வேந்தராக பிச்சுமணி நியமனம்!

மனோன்மணியம் பல்கலை.துணை வேந்தராக பிச்சுமணி நியமனம்!
Published on

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணை வேந்தராக கே.பிச்சுமணி நியமிக்கப்பட்டுள்ளார். 

திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர் கி.பாஸ்கர். இவரது பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து புதிய துணை வேந்தரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார். புதிய துணை வேந்தராக கே.பிச்சுமணி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 3 வருடங்கள் இந்த பதவியை வகிப்பார். 

வேதியியல் பேராசிரியரான பிச்சுமணி, ஆசிரிய பணியில் 37 வருடம் அனுபவம் உள்ளவர் என்று ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com