\
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு  புதிய வண்ண சீருடைகள் அறிவிப்பு

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புதிய வண்ண சீருடைகள் அறிவிப்பு

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புதிய வண்ண சீருடைகள் அறிவிப்பு
Published on

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான புதிய சீருடை வண்ணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


தமிழகத்தில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் சாம்பல் நிற முழுக்கால் சட்டையும், இளங்சிவப்பு நிறக் கோடிட்ட மேல் சட்டையும் அணிய வேண்டும். மாணவிகள் கூடுதலாக சாம்பல் நிறக் கோடிட்ட மேல் கோட் அணிய வேண்டும் ‌என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் கருநீல முழுக்கால் சட்டையும், கருநீலக் கோடிட்ட மேல் சட்டையும், மாணவிகள் கூடுதலாக கருநீலக் கோடிட்ட மேல் கோட்டும் அணிய வேண்டும். ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது போன்று, இந்த புதிய சீருடைகளை மாணவர்கள் தங்களது சொந்த செலவிலேயே வாங்கிக்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை ‌உள்ள மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் இலவச சீருடையில் எந்த மாற்றுமும் இல்லை. இது குறித்த சுற்றறிக்கை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநரால் அனுப்பப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com