புதிய வகை கொரோனா தொற்று: சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

புதிய வகை கொரோனா தொற்று: சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
புதிய வகை கொரோனா தொற்று: சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

தென்ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை சர்வதேச விமான முனையத்தில் செய்யப்படும் பரிசோதனைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “புதிதாக உருமாறிய கொரோனா அண்மையில் தென் ஆப்பிரிக்கா நாட்டில் கண்டறியப்பட்டு ஓமிக்கிரான் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும், உலக நாடுகள் சில முழுவதும் ஓமிக்கிரானில் இருந்து தற்காத்துக்கொள்ள விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.

சர்வதேச விமான நிலையத்தில் ஏற்கனவே தொடர்ந்து வெளி நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனையும், காய்ச்சல் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து நேரடியாக வருபவர்கள் மற்றும் பல நாடுகளுக்கு சென்று வருபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்” என்று கூறினார்.

மேலும், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு விமான நிலையத்திற்கும் உதவி திட்ட அலுவலர் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இன்று முதல் நியமிக்கப்பட உள்ளதாக கூறிய அவர், தென் ஆப்பிரிக்கா, பிரேசில், சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, 8 நாட்களுக்கு பின் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், 2 தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டவர்களையும் கண்காணித்து பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், ஏற்கனவே வந்த 55,090 நபர்களுக்கு பரிசோதனைகளில் 3 நபர்களுக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், அதில் பெரும் பகுதியானவை டெல்டா வைரஸ் தொற்றாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தீவிர கண்காணிப்பு இனி வரும் காலங்களில் அவசியம் என்பதால் மக்கள் நல்வாழ்வுத்துறை அதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com