சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சிசிடிவியுடன் புதிய ரயில் சேவை!

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சிசிடிவியுடன் புதிய ரயில் சேவை!

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சிசிடிவியுடன் புதிய ரயில் சேவை!
Published on

சென்னை கடற்கரை முதல் திருமால்பூர் வரையிலான 3 -ஆம் கட்ட புறநகர் மின்சார ரயில் சேவை நாளை முதல் தொடங்குகிறது.  

சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை புறநகர் மின்சார ரயில் சேவை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.  இதற்காக சென்னை ஐ.சி.எஃபி. இல் 12 பெட்டிகளை கொண்ட நான்கு ரயிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் அதிகபட்சமாக 105 கி.மீ வேகத்தில் செல்லும். இதில் பெண்களின் பாதுகாப்பை முன்னிட்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் 9.15 மணிக்கெல்லாம் செங்கல்பட்டுக்கு சென்று விடும். இதில் 1168 பயணிகள் அமர்ந்துகொண்டும், 4852 பேர் நின்றுகொண்டும் பயணம் செய்யலாம். இது மற்ற ரயில்களை விட 20% கூடுதல் பயணிகள் கொள்ளளவு ஆகும். 

இதில் எல்இடி வசதிகொண்ட இழுப்புச் சங்கிலியும், 30% கூடுதலான திறன் கொண்ட ப்ரேக் சிஸ்டமும் உள்ளது. இந்த ரயில் குறைந்த அளவே சத்தம் எழுப்பும் தன்மை கொண்டது. பயணிகளுக்கு மிகவும் வசதிகரமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரயில்களில் ஜிபிஎஸ் அடிப்படையில் இயங்கும், ரயில் நிலையங்கள் அறிவிப்பு டிஸ்ப்ளேவும் அமைக்கப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com