அரசின் பசுமை வீட்டில் டாஸ்மாக் கடை: மக்கள் அதிர்ச்சி

அரசின் பசுமை வீட்டில் டாஸ்மாக் கடை: மக்கள் அதிர்ச்சி
அரசின் பசுமை வீட்டில் டாஸ்மாக் கடை: மக்கள் அதிர்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அரசு கொடுத்த வீட்டில் அரசாங்க மதுபானக்கடை செயல்பட்டுவருவது பற்றி பொதுமக்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பெரியாலூரில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபானக்கடை, நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டது. இந்நிலையில் பெரியாலூரில் இருந்து பூவைமாநகர் செல்லும் வழியில் அரசின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் அதிகாரிகளின் அனுமதியோடு அந்த மதுபானக் கடை புதிதாக திறக்கப்பட்டுள்ளது. அதே கிராமத்தில் வசிக்க வீடுகள் இன்றி பல குடும்பங்கள் கூறையின் கீழ் தவிக்க அரசு ஏழைகளுக்கென்று கட்டிகொடுத்த இலவச வீட்டில் அரசு டாஸ்மாக் கடை இயங்கிவருவது குறித்து அப்பகுதி மக்கள் ‌கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மக்கள் மனு கொடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com