\
தமிழகத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Published on

தமிழகத்தில் நாளை மறுநாள் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


நிவர் புயல் தமிழக மக்களை அச்சுறுத்தி ஓய்ந்த நிலையில் தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், தாமதமாக இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் தென் தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் நாளை மறுநாள் தமிழகத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக, தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளாவிற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com