ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களின் வாகனங்களை பதிவு செய்யக்கூடாது என்று மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நிகழ்ந்த பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு ஓட்டுநரின் தவறே காரணமாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மோட்டார் வாகன விதிகளின் அடிப்படையில் தனி மனிதர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், விபத்துகளை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களின் வாகனங்களை பதிவு செய்யக் கூடாது என்று அனைத்து போக்குவரத்து மண்டல அதிகாரிகளுக்கு போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். வாகன விற்பனையாளர்களும் இந்த விதியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.