\
'அரசுமுறை பயணத்திற்கு அனுமதி அவசியம்' : தலைமைச் செயலாளர்

'அரசுமுறை பயணத்திற்கு அனுமதி அவசியம்' : தலைமைச் செயலாளர்

'அரசுமுறை பயணத்திற்கு அனுமதி அவசியம்' : தலைமைச் செயலாளர்
Published on

மாநிலத்திற்குள் அரசு முறை பயணங்களை மேற்கொள்ள தலைமை செயலாளரின் அனுமதி அவசியம் பெற வேண்டும் என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

துறை செயலாளர்கள், ஆட்சியர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு தலைமைச்செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அதில்,
அரசு முறை பயணங்களுக்கு துறை செயலாளர்கள், ஆட்சியர்கள் உரிய அனுமதி பெற வேண்டும் என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிவுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களும், ஆட்சியர்களும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மாநிலத்திற்குள் பயணம் மேற்கொள்ள வேண்டுமானால் தலைமைச் செயலாளரிடம் உரிய அனுமதி பெறவேண்டும் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்திற்கு வெளியே அரசு முறை பயணங்கள் மேற்கொள்ள முதலமைச்சரிடம் அனுமதி அவசியம் பெற வேண்டும் என்றும் தலைமைச் செயலாளரின் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com