கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரியில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரியில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரியில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
Published on

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகளுக்கு அனுமதிகப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திரையரங்குகள், மால்கள், வணிக நிறுவனங்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி; கொரோனா வழிக்காட்டுதல்களை பின்பற்றி பள்ளிகளை நடத்த புதுச்சேரி அரசு அனுமதி; உணவகங்கள், கலையரங்கங்கள், மதுபானக் கூடங்களிலும் 50% மட்டுமே அனுமதி; சலூன், அழகு நிலையங்கள், ஸ்பாக்களில் 50% மட்டுமே அனுமதி; வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதிக்க உத்தரவு ஆகியவை வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்புகள் ஒருபக்கம் வெளியாகியிருக்க, புதுச்சேரியில் நடைபெறும் இளைஞர் விழா எந்த வகையில் நடத்துவது என்பது குறித்து மத்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. புதுச்சேரிக்கு பிரதமர் வருவது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு இதுவரை எந்தவித தகவலும் இல்லை என மாவட்ட ஆட்சியர் வல்லவன் பேட்டியளித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com