சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று முதல் புதிய சொத்துவரி அமலுக்கு வருவதால் கூடுதல் தொகையை விரைந்து செலுத்த அறிவுறுத்தல்.
சென்னை மாநகராட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படாத வகையில் தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியது. இதற்க்காக சமீபத்தில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி, புதிய சொத்து வரி சென்னை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டது. மேலும் ஏற்கெனவே வரியைச் செலுத்தியவர்கள் கூடுதல் தொகையை விரைவில் செலுத்தவும் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனைதொடர்ந்து இன்று முதல் புதிய சொத்து வரி அமலுக்கு வரும் நிலையில், அதற்கான விவரங்களைச் சம்மந்தப்பட்ட சொத்து உரிமையாளர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது. எனவே, புதிய சொத்து வரியை விரைந்து செலுத்தக் கோரி சொத்து உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

