தமிழ்நாட்டில் நாளை முதல் பத்திரப்பதிவில் இது கட்டாயம்! விவரம் உள்ளே

தமிழ்நாட்டில் நிலங்களின் புகைப்படம், புவியியல் விவரங்களுடன் பத்திரப்பதிவு செய்யும் முறை நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.

சொத்துகளை பதிவு செய்யும்போது நிலம், வீடுகளின் புகைப்படத்தை சேர்ப்பதில்லை. இதனை பயன்படுத்தி வீடுகளை பத்திரப்பதிவு செய்யும்போது காலிமனை என்று கூறி பதிவு செய்கிறார்கள். இதனால் ஏற்படும் கோடிக்கணக்கான வருவாய் இழப்பை தவிர்க்கும் வகையில், நாளை முதல் நிலங்களின் புகைப்படம், புவியியல் விவரங்களுடன் பத்திரப்பதிவு முறை தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வருகிறது.

மனை அல்லது வீடுகளின் புகைப்படம் சேர்க்கும் நடைமுறை அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com